




வீர இந்து சேவா நிறுவனர் :
M. கிருஷ்ணகுமார் அவர்களின் தந்தையார் திரு. மணி அவர்கள், தாயார் திருமதி பழனியம்மாள் அவர்கள். பூர்வீகம் : தந்தையார், தாயார், சொந்த ஊர், தொழில்.
தன்னுடைய கல்வி பருவம் முழுவதும் கோவையில் முடித்து, ஒரு ஓட்டுநராக, மில் தொழிலாளியாக, கூலி தொழில் என பல இடங்களில் பணி புரிந்து, ஒவ்வொரு மனிதர்களுடைய கஷ்டங்கள், போராட்டங்கள், வேதனைகள், என அனைத்தும் பார்த்து, மனதளவில், மிகப்பெரிய வேதனைகள் பட்டு, இந்த வறுமையில் உள்ளவர்களுக்கு மற்றும் நடுத்தர குடும்பங்கள், உயர் குடும்பங்கள்,உழைக்கும் தொழிலாளர்கள், பெண்கள், மாற்று திறனாளிகள் என அனைவர்க்கும் எதாவது ஒவ்வொரு குறைகள் அவரவருக்கு இருக்கும். ஆனால் அவர்களுக்கு உதவி செய்ய யாரும் முன் வருவதில்லை.ஆனால் அவர்களுக்கு ஒரு சாதாரண மனிதராக , தன்னால் முடிந்த உதவிகளை, பிறரிடம் அல்லது ஏதாவது ஒரு நல்ல வகையில் உரிய ஏற்பாடு செய்ய எண்ணி சில இந்து அமைப்புகளில் பல வருடங்கள் இருந்து பணி புரிந்து, சில இடங்களில், சில நல்ல செயல் பாடுகள் செய்ய இயலாத நிலையில் தான்,
தன்னுடன் உள்ள சில நண்பர்கள் துணையுடன், புதிய இயக்கம் உருவாக்க முற்பட்டு 2020 ம் வருடம் விஜயதசமி நாள் அன்று புதிய இயக்கமான,வீர இந்து சேவா இயக்கம் தொடங்கப் பட்டது. மேலும் தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள மாவட்டம் ஆன திருச்சி மாவட்ட நகரப் பகுதியில் உள்ள அரங்கில் கொடிகளும், மற்றும் புதிய மாவட்ட பொறுப்பாளர்களும், அறிமுகப்படுத்தி வீர இந்து சேவா இயக்கம் தொடங்கப்பட்டது. பின்பு, இயக்கத்தின் முக்கிய நிகழ்ச்சிகளாக!!
ஒவ்வொரு வருடமும், விநாயகர் சதுர்த்தி விழாவும்,
விஜய தசமி திருநாளில் ஆண்டு விழா, பண்பாட்டு பயிற்சி முகாமும்,
பழனியில் தைப்பூசம் விழாவை முன்னிட்டு, பாதையாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பழனி மலை கிரிவலம் பாதையில், ஒரு நாள் அன்னதானம் செய்தும்,,
தீபாவளி திருநாள், மற்றும் முக்கியமான விசேஷ நாட்களில், அன்னதானம், மற்றும் முதியவர்களுக்கு உதவி தொகைகள், வழங்கியும்,
மேலும் பொது மக்களுக்கு, உள்ள நடை முறை மற்றும் பொது பிரச்சனைகளை தீர்க்க கூடிய செயல்களையும், பள்ளி, கல்லூரியில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு, தேவைபடும் உதவிகள் மற்றும் அமைப்பில் உள்ளவர்களுக்கு, எங்கள் அமைப்பின் தாரக மந்திரமான, இல்லை என்று சொல்லாமல்!! இயன்றதை செய்வோம்!!
என்ற வழிகளில் பல உதவிகளை எங்கள் வீர இந்து சேவா இயக்கம்!மூலம் தொடர்ந்து செய்து வருகிறோம்!!



எங்கள் இயக்கத்தின் கொடி
காவிக் கொடி - அது இந்த பூமியில் இந்திய நாட்டின் விடுதலைக்கு போராடி உயிர் நீத்தவர்கள் நினைவில்!!
கொடியின் இடது புறத்தில் ஒரு வீரரின் படை ஆயுதங்கள் ஏந்திய படம் விளக்கம். - வீர மிக்க நாட்டின் வீரர்கள் தியாகம் குறித்து, நம் அனைவரும் இந்த தேசத்தின் வீர மகன் என்பதை அடையாளமாக்க!!
கொடியின் மத்தியில் வேல்கள் சுற்றி நடுவில் ௐம் குறித்து விளக்கம்!! - வேல்கள் உலகின் அன்னை பராசக்தி, அரக்கர்களை மற்றும் தீய சக்திகளை அழிக்க முருகப் பெருமானுக்கு வழங்கிய சக்திவேல்!!
வேல் படை சூழ நடுவில் உள்ள ௐம் விளக்கம்!! - இந்த உலகம் முழுவதும் ஹம், ௐம் என்ற ரீங்காரத்தில் இயங்கி வருகிறது. நாம் அனைவரும் அதனில் உள் அடக்கம்!!
என்பதே கொடியின் விளக்கம்!!
எங்களது பயணத்திற்கான பாதைகள் . . .
அறநூல்கள் பாதுகாத்தல்,
பெண்களை கௌரவித்தல் மற்றும் பாதுகாத்தல்,
திருக்கோவில்கள் திருமடங்கள் பாதுகாப்பு,
சனாதன தர்ம முறையின் பெருமையை பரப்புதல்,
இயற்கை வழிபாடும் அதை பேணி காத்தலும்,
பாரதத்தை இந்து நாடாக அறிவிக்க அரசை ஊக்குவித்தல்,
மதமாற்றத்தை தடுப்பது, மதம் மாறியவர்களை தாய் மதம் திருப்புதல்,
இந்துக்களின் வழிபாட்டு முறைகளையும் சடங்குகளையும் அடுத்தடுத்த தலை முறைக்கு கொண்டு சேர்த்தல்,
வருங்கால தலைமுறைகளை பெரியவர்களுக்கு மதிப்பளிக்ககூடிய வகையில் அவர்களை உருவாக்குதல்,
தேசபக்தி கொண்ட இளைஞர்களை உருவாக்குதல்,
மறைந்து கொண்டிருக்கிற பாரம்பரிய மருத்துவமான சித்தா, ஆயுர்வேதா, இயற்கை வைத்தியம் போன்றவைகளை மீட்டெடுத்து மக்களுக்கு பயன் பெறசெய்தல்,
பழங்கால கலைகளை இளைஞர்ளுக்கு பயிற்றுவித்தல்,
சிவனடியார்கள் மற்றும் சாதுக்களை பாதுகாப்பது,
ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவுவது,
இயலாதவர்களுக்கு கல்வி, மருத்துவம் சார்ந்த வகையில் உதவுவது,
கோமாதா வழிபாட்டின் முக்கியத்துவத்தை இந்துக்களுக்கு உணரச்செய்தல்,
இந்துக்களை இந்துக்கள் நடத்தும் கடைகளிலேயே பொருட்களை வாங்க விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,
ஒன்றுபட்ட இந்து சக்தியை உருவாக்கி (வாக்கு வங்கி) இந்து மதத்திற்கு எதிராக செயல்படும் கட்சிகளுக்கு எதிராக திருப்புவது.




25/5/2026ம் தேதி கோவை மாவட்டம் சூலூர் புதிய பேருந்து நிறுத்தம் பகுதியில், கண்ணம்பாளையம் குளத்துபகுதியில், பாலியல் வன்கொடுமையில், உயிர் இழந்த சிறுமிக்கு, நீதிகேட்டு, மற்றும் அந்த குற்றவாளி மிருகங்களுக்கு, தூக்கு தண்டனை கொடுக்க வேண்டியும்,சூலூர் புதிய பேருந்து நிலையத்தில் வீர இந்து சேவா, மற்றும் இந்து அமைப்புகள் இணைந்து நடத்திய மாபெரும் நீதிப் போராட்டம் நடத்தப் பட்டது. நிகழ்ச்சியில் வீர இந்து சேவா நிறுவனர் கிருஷ்ணகுமார், வீர இந்து சேவா மாநில அமைப்பாளர் திருச்செல்வம், கோவை மாவட்டத் தலைவர் கோவிந்தராஜ், தொழிற் சங்கத் தலைவர் ரஜினி கோவிந்தராஜ், வ தொழிற் சங்கத் துணை தலைவர் சக்திவேல், தொழிற்சங்க செயலாளர் மாதவன், மக்கள் சேவைப் பிரிவு தலைவர் ஜாக்கி ஜான், ஆன்மீக பிரிவுத் தலைவர் கதிர், மோகன், இளைஞர் அணி செந்தில், ரிஷி ஹரன், கண்ணம் பாளையம் தலைவர் குணா, மாவட்ட இளைஞர் அணி தலைவர் ஆனந்த், ஜோதிட பிரிவு தலைவர் சிவ தேவேந்திரன்,,சூலூர் பொறுப்பாளர் தன சேகர், வெள்ளிங்கிரி மற்றும் பொது மக்கள் அனைவரும் கலந்து கொண்டு நீதிப் போராட்டம் செய்து, பெண்கள் பாது காப்புக்கு கடுமையான சட்டங்கள் இயற்றியும், கொலை செய்த குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை வழங்குமாறு தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள்.
7-9-2024ம் தேதி விநாயகர் சதுர்த்தி அன்னதானம்
கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் வீர இந்து சேவா சார்பாக 8 இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட பட்டு காலை முதல் இரவு 9.00மணி வரை சிறப்பாக மாபெரும் அன்னதானம் நடை பெற்றது. விழாவில் கோவை மாவட்டம் சார்பாக கலந்து கொண்ட சிறப்பாக செயல்பட்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும் வீர இந்து சேவா தலைமை சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! தெரிவித்து கொள்கிறேன். நன்றி! வணக்கம்.












2020 ம் வருடம் விஜய தசமி நாள் நமது வீர இந்து சேவா இயக்கம் தொடங்கப்பட்டது. ஆதலால் விஜய தசமி அன்று இயக்கத்தின் ஐந்தாம் ஆண்டு துவக்க நாளை முன்னிட்டு கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள ஈஸ்வரன் கோவிலுக்கு எதிரில் உள்ள அங்காளம்மன் கோவிலில் இன்று 12/10/2024 ம் தேதி சனிக்கிழமை விஜய தசமி அன்று காலை சரியாக 10.00மணிக்குஆரம்பித்து மதியம் 1.30 மணி வரை கோவை மாவட்ட வீர இந்து சேவா செயற்குழு கூட்டம் மற்றும் சமய பயிற்சி வகுப்பு, ஐயா, திரு.சசிகுமார் ஜி, அவர்கள் மற்றும் ஆன்மீக செம்மல் திரு.ரவி ஐயா அவர்கள், மற்றும் வீர இந்து சேவா மாநில ஆன்மீக பிரிவுத் தலைவர் ஸ்ரீ ல ஸ்ரீ வெற்றி வேல் சாமிகள் (வடிவேல் சாமிகள்), வீர இந்து சேவா இயக்கத்தின் நிறுவனர் திரு. கிருஷ்ணகுமார் ஜி, அவர்கள், மாநில கொள்கை பரப்பு செயலாளர் திரு. திருச்செல்வம் ஜி, அவர்கள் மேலும் பாரதீய ஜனதா கட்சி வடக்கு மண்டலத் தலைவர் திரு. இரவிக்குமார் ஜி, பாரதீய ஜனதா கட்சி தொழிற் சங்க செயலாளர் திரு.இரவிச்சந்திரன் ஜி பாரதீய ஜனதா கட்சி கோவை மாவட்ட ஆன்மீக பிரிவுத் தலைவர் திரு. சத்திய நாராயணன் ஜி, அவர்கள் என அனைவரும் சிறப்பான முறையில் சிறப்புரை ஆற்றினார்கள். இன்னும் இந்த நிகழ்ச்சியை மிகப்பெரிய பொருட்செலவில் செலவு செய்தும், சிறப்புரை ஆற்றிய கோவை மாவட்ட தலைவர் திரு. கோவிந்தராஜ் ஜி, அவர்கள், மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு,பிளக்ஸ் ஒட்டி தன்னுடைய சிறந்த அர்ப்பணிப்பு பணி செய்த வீர இந்து சேவா கோவை மாவட்ட ஆன்மீக பிரிவுத் தலைவர் திரு. கிருஷ்ணசாமி என்ற ஜாக்கி ஜான் அவர்கள் மற்றும் விடுமுறை நாளில் தன் குடும்ப வேலைகளை அனைத்தையும் விட்டு விட்டு,இந்த சமுதாய பணிக்கு வருகை தந்து இந்த நிகழ்ச்சியை சிறப்பாக சிறப்புற செயல் ஆற்றிய அனைத்து பொறுப்பாளர்களுக்கும், மற்றும் நமக்கு உணவு வாகனம் மூலம் எடுத்து வந்து, உதவிய திரு. சபரி ஜி, மற்றும் மணிகண்டன் ஜி அவர்களுக்கும் நமக்கு கோவில் மூலம் உதவி செய்த அண்ணா, லோகநாதன் அவர்களுக்கும்,, வாகன உதவி செய்த திரு. குட்டி அவர்களுக்கும் புகைப்படம் எடுத்து உதவிய மற்றும் மைக் செட் அமைத்து சிறப்பாக செயல் பட்ட திரு.அருண் ஜி, அவர்களுக்கும், அவருடைய தொழிலாளி க்கும்,, மற்றும் இந்த நிகழ்ச்சிக்கு பல சூழ்நிலை காரணமாக வர இயலாத அனைத்து புதிய பொறுப்பாளர்களுக்கும் வீர இந்து சேவா, தலைமை சார்பாகவும்,அனைவர்க்கும் விஜய தசமி சார்பாகவும் மிகப்பெரிய நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.மேலும் நீங்கள்அனைவரும் சிறப்பான சூலூர் சிங்கங்களாக மாற்றி அமைத்து உங்கள் வாழ்வில் மென் மேலும் வெற்றி பெற வாழ்க!வளமுடன்!என வாழ்த்தும்!! உங்கள் வீர இந்து சேவா அமைப்பு!!
குறிப்பு : இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தவறிய அனைத்து நண்பர்களும், இனி வரும்காலங்களில் கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்ள உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டு கொள்கிறேன். மேலும் வீர இந்து சேவா அமைப்பு உங்கள் அனைவரின் வாழ்க்கைக்கு மிகப்பெரிய வழி காட்டியாக உருவெடுக்க உள்ளது. அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டுகிறேன். நன்றி! வணக்கம்!
என்றும் தேசப்பணியில்!!
வீர இந்து சேவா
தொடர்புக்கு : 638078225,9677969630


தொடர்புக்கு :
96779 69630 / 99524 63773


© 2026, All Rights Reserved





















































































